சிவகங்கை, அக்.25:தசரா பண்டிகையை மற்றும் தொடர் அரசு விடுமுறை வருவதை தொடர்ந்து சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக தொடர் புகார்கள் பொது மக்களிடமிருந்து வந்தது.
இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி பகுதிகளில் ஆர்.டி.ஓ மூக்கன் தலைமையில் ஆம்னி பேருந்துகளை சோதனை செய்தனர். கடந்த 3 நாட்களாக 65 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் இரண்டு பேருந்துகள் உரிய அனுமதியின்றியும் அதிக கட்டணம் வசூல் செய்ததாகவும் கூறி பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.