நாகர்கோவில், செப். 14 : டச்சுப்படையை வென்ற அனந்த பத்மநாபன் நாடாரின் 274வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. தச்சன்விளையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் சந்திரன் ஜெயபால், மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் லூர்து பாபு, ரெஜிசிங், சி.எல்.ஜோ, ராஜா, பிரவின், குட்டம் சிவாஜி, முத்துகுமார், ரவிச்சந்திரன், சந்திரன், நிக்சன் ராஜ், சுஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.