கமுதி, ஜூன் 4: கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கமுதி மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான ஆலயமாகும். இந்த ஆலயத்தில் வருடா வருடம் ஜூன் மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஏராளமான கிறிஸ்துவர்கள் மேளதாளம் மற்றும் வான வேடிக்கையுடன் எடுத்து வந்து ஆலயத்தை வலம் வந்தனர். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தின் முன்பு அனைவரும் சிறப்பு வழிபாடு நடத்தினர். பிறகு கொடி அர்ச்சிக்கப்பட்டது. கமுதி பங்குத்தந்தை அம்புரோஸ் லுயிஸ் முன்னிலையில், இருதயபுரம் பங்குத்தந்தை கிறிஸ்டோபர் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டை பங்குத்தந்தை அந்தோணி பாக்கியம் கொடியை ஏற்றினார்.
அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றம்
0