அந்தியூர், ஆக. 26: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக பேரூர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அவைத் தலைவர் கோவிந்தன் தலைமையில், பேரூர் கழகச் செயலாளர் காளிதாஸ் முன்னிலையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில், திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள், தலைமை கழகத்தின் கட்டளைப்படி கட்சிப் பணிகளை மேற்கொள்வது, தமிழக முதல்வரின் திட்டங்களை ஏழை எளிய மக்களிடத்தில் கொண்டு சென்று, அவர்கள் பயனடையுமாறு கழக உறுப்பினர்கள் பங்காற்ற வேண்டும் என்பது குறித்த கருத்துக்கள் எடுத்துக்கூறப்பட்டது.
நிகழ்ச்சியில், பேரூர் கழகத் துணைச் செயலாளர் பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், வழக்கறிஞர் மயிலேறு, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளியங்கிரி மற்றும் பேரூர் வார்டு கழகச் செயலாளர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.