அந்தியூர், மே 29: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் வாரச்சந்தை பகுதியில் தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த நபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் வெள்ளித்திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (34) மற்றும் பவானி, வர்ணபுரம் பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன் (40) என்பதும், அவர்களுடன் இருந்து தப்பிச்சென்ற பவானியை சேர்ந்த சதீஷ் ஆகியோர் சட்ட விரோதமாக ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 5 செல்போன்கள், இரண்டு பைக்குகள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்து 800 பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தியூர் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்ற இருவர் கைது
0