கோவை, ஆக.22: கோவை மாவட்ட கலெக்டர் அருகே 2 பெண் வழக்கறிஞர்கள் நேற்று மதியம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மது போதை பெண் வழக்கறிஞரில் ஒருவருடன் பேச முயன்றார். மேலும் அவர் பேசியதை கேட்காமல் 2 பேரும் சென்றனர். இதில் கோபமடைந்த அந்த வாலிபர் வேகமாக சென்று அவர்கள் முன் நின்று ரகளை செய்தார். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன் நின்ற போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
ஏன் பெண்களிடம் வாக்குவாதம் செய்கிறாய்? என கேட்டபோது அந்த வாலிபர் போதையில் தொடர்ந்து உளறியபடி இருந்தார். போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றி சென்று விசாரித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் வட்டாரத்தில் சிலர் போதையில் சுற்றுவதாகவும், பொதுமக்கள் பயணிகளிடம் அத்துமீறி வருவதாக புகார் பெறப்பட்டுள்ளது. இங்கே ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.