ஸ்பிக்நகர், நவ. 16: தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட அத்திமரப்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இங்கு படித்த இளைஞர்கள், அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் பொது நூலகம் இல்லாததால் அவர்கள் வேறு பகுதிகளில் உள்ள நூலகங்களை தேடிச் செல்ல வேண்டிய சூழல் இருந்து வருகிறது. எனவே இப்பகுதியில் நூலகம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.