நன்றி குங்குமம் டாக்டர் அறிவோம்களைப்பு என்பது மனிதர்கள் எல்லோருக்கும் சகஜமான உணர்வு. அதிக நேரம் வேலை பார்த்ததாலோ, கடுமையான வேலைகளைச் செய்ததாலோ களைப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், அதை எல்லா நேரங்களிலும் இப்படி கடுமையான வேலையின் விளைவாக ஏற்பட்டதாக நினைத்து அலட்சியப்படுத்தக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.தொடர்ச்சியான களைப்புஉடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள். காரணமின்றி அடிக்கடி அதிக களைப்பை உணர்பவர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதீத களைப்பானது சர்க்கரை நோய், இதய பிரச்சனைகள், தைராய்டு மற்றும் ரத்த சோகை பாதிப்புகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்…அதீத களைப்பை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள்* தூக்கமின்மைகளைப்பை ஏற்படுத்தும் காரணங்களில் முக்கியமானது தூக்கமின்மை. ஒரு நாள் பொழுதை ஆரோக்கியமாக கடக்க 6 முதல் 8 மணி நேரம் உறக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். அது கிடைக்காத பட்சத்தில் களைப்பு ஏற்படும். எந்த வேலையையும் செய்ய முடியாதபடி மந்தமான மன நிலையும் ஏற்படும். ஸ்லீப் ஆப்னியா என்ற தூக்கப் பிரச்னை உள்ளவர்களுக்கும் அதீத களைப்பு ஏற்படும். ஸ்லீப் ஆப்னியா(Sleep apnea) என்பது தூக்கமின்மை சிகிச்சை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய ஒன்று.* தவறான உணவுப் பழக்கம்சரிவிகித உணவு பழக்கமே ஒருவரை நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க வைக்கும். Junk Foods எனப்படும் குப்பை உணவுகளை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரையின் அளவு தாறுமாறாக இருக்கும். இந்த அளவானது சராசரியைவிட குறையும்போது உடல் அதீத களைப்பை உணரும். தவிர; சிறிதும் ஆற்றலே இல்லாத மாதிரியும் உணர்வார்கள்.* ரத்த சோகைஇரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதையே அனீமியா அல்லது ரத்தசோகை என்கிறோம். போதுமான இரும்புச் சத்து இல்லாத நிலையில் ரத்த சிவப்பு அணுக்களால் எல்லா பாகங்களுக்கும் ஆக்சிஜனைக் கடத்துவது இயலாமல் போகும். இதயத்தின் செயல்பாட்டில் அழுத்தம் கூடும். அதன் காரணமாக களைப்பு ஏற்படும்.* கஃபைன்காபி, கோலா போன்று கப்ஃபைன் அதிகம் உள்ள பானங்களை அடிக்கடி குடிப்பவர்களுக்கு களைப்பு ஏற்படுவதைப் பார்க்கலாம். உடலுக்கு இன்ஸ்டன்ட் உற்சாகம் ஏற்படுத்துவதைப் போன்ற பிரமையை கொடுக்கக்கூடியது கஃபைன். அதனால்தான் களைப்பாக இருக்கும் நேரங்களில் காஃபி குடித்தால் அதிலிருந்து விடுபடுவதாகப் பலரும் நினைக்கிறார்கள்.உடலில் கஃபைனின் அளவு இறங்கியதும் மீண்டும் உடல் களைப்பை உணரத் தொடங்கும். உண்மையில் கஃபைன் தருகிற இன்ஸ்டன்ட் எனர்ஜியானது ஆரோக்கியமானது அல்ல. உடலின் நீர் வறட்சியும் களைப்புக்கு இன்னொரு காரணம். காபி, டீ குடிக்கும் போது கூடவே தண்ணீரும் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.வயதானவர்களுக்கு களைப்பு ஏற்படுவது சகஜம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், களைப்புக்கும் வயதுக்கும் தொடர்பில்லை. சாதாரணமாக ஏற்படும் உடல் அசதிக்கும் அதீத களைப்புக்கும் உள்ள வேறுபாட்டை பலரும் உணர்வதில்லை. சாதாரண அசதி என்பது என்றோ ஒரு நாள் ஏற்படுவது. ஆனால், அதீத களைப்பு என்பது தொடர்ச்சியான அசதியின் தேக்கம். எனவே, தினமுமே உடல் அசதியை உணர்பவர்கள் அதற்கு வேலைப்பளுவே காரணம் என நினைத்து அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.ஒரு வேலையில் ஆர்வமின்மை, அதைச் செய்வதில் சோம்பேறித்தனம் போன்றவற்றைப் பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது அந்த வேலையின் தன்மை அல்லது மனநிலையைப் பொறுத்தது எனக்; கடந்துவிடுகிறார்கள். அப்படி உணரும் பட்சத்தில் அது அதீத களைப்பின் மறைமுக அறிகுறிகளாகவும் இருக்கலாம். நீங்கள் அலர்ட்டாக வேண்டிய தருணம் இது.– ராஜி
அதீத களைப்பா… அலட்சியம் வேண்டாம்!
74
previous post