பாகு செய்யவெல்லத்தை, தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். பிறகு கொதிக்க விடவும். கெட்டி கம்பிப்பதமாக வந்தவுடன் ஏலக்காய் பொடி கலக்கவும். ரெடியாக உள்ள மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டிப்பரத்தி, தயாராக வைத்துள்ள வெல்லப்பாகை அதன்மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கைவிடாமல் கிளறவும். பிறகு 2 டீஸ்பூன் நெய் சேர்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். 2 அல்லது 3 நாள் கழிந்த பிறகு ஒரு வாழை இலையில் சிறு சிறு வட்டங்களாகத் தட்டி, நெய்யிலோ எண்ணெயிலோ பொரித்தெடுக்கவும்.குறிப்பு: மாவு ஈரப்பதமாக இருக்க வேண்டும். அதிரசம் மாவு ரெடியான தினமே பொரிக்கக் கூடாது.; பாகை கீழே இறக்கி வைத்து தாம்பாளத்தில் கிளற வேண்டும். அடுப்பின் மேல் கிளறக்கூடாது.