தஞ்சாவூர் ஆக.19: தஞ்சாவூரில் இருந்து திட்டை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதியமான் தோரண வாயில் மேல்புறத்தில் வேம்பு, ஆலம், அரசன் மரக் கன்றுகள் முளைத்து தோரணவாயிலில் விரிசலை ஏற்படுத்தி வருகிறது.தஞ்சாவூர் அடுத்து பள்ளியக்ரஹாரம் பகுதியில் இருந்து திட்டை செல்லும் சாலையில் ரவுண்டானா அருகில் அதியமான் தோரண வாயில் உள்ளது. இந்த வழியாக தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் ஏராளமான அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களிலும் ஏராளமானோர் இந்த வழியாக திட்டை கோயிலுக்கு செல்கின்றனர். மேலும், கும்பகோணத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்த தோரண வாயில் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் தோரண வாயில் மேல்புறம் வேம்பு, ஆலமரம், அரசமரம் செடிகள் வளர்ந்து நுழைவாயிலை பழுதாக்கும் நிலையில் உள்ளது. எனவே, செடிகளை முழுமையாக அகற்றி, சீரமைக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.