ஆண்டிபட்டி: தேனி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள டி.சுப்புலாபுரத்தில் 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய தலைவருமான லோகிராஜன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு துணை தலைவருமான வரதராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் அமரேசன், ஆண்டிபட்டி பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பி.ராமர், தலைமைக் கழக பேச்சாளர் இளவரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூர் கவுன்சிலர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.