சென்னை, மே 14: அதிமுக நிர்வாகியை தாக்கிய நாம் தமிழர் கட்சி மாவட்ட ெசயலாளர் ஜமாலை போலீசார் கைது செய்தனர். சென்னை, 59வது வார்டு அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி பகுதி பொருளாளராக இருப்பவர் யுவராஜ்(36). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரின் ஆட்டோ பின்புறம் நாம் தமிழர் கட்சியின் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்து கிழித்துள்ளார். அதை பார்த்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரான ஜமால்(38) என்பவர் எதற்காக ஸ்டிக்கரை கிழிக்கிறாய் என்று கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அதிமுக நிர்வாகியான யுவராஜை, நாதக மாவட்ட செயலாளர் ஜமால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அதிமுக நிர்வாகி யுவராஜ் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிந்து நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஜமாலை கைது செய்தனர்.
அதிமுக நிர்வாகியை தாக்கிய நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கைது: போலீசார் நடவடிக்கை
0