பள்ளிபாளையம், ஆக.18: பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கான உரிமைச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்எல்ஏ பங்கேற்று, கட்சி உறுப்பினர்களுக்கு உரிமைச்சீட்டு வழங்கி பேசினார். அப்போது, கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமைச்சீட்டுகளை விரைந்து வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், நகர அதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி, பேரவை செயலாளர் சுப்பிரமணி, துணைச்செயலாளர் ஜெய்கணேஷ், பொருளாளர் சிவக்குமார், மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.