ஈரோடு,மே 30: மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமலிங்கம் தலைமை தாங்கினார்.