போடி, ஜூன் 10: தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை மொட்டயசாமி கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கூடலிங்கம் (53), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் தேனி அருகே அன்னஞ்சியில் தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். கடந்த சில நாட்களில் அதிகளவு மது குடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் காலை வேலைக்கு சென்றவர் சில்லமரத்துப்பட்டி டாஸ்மாக் அருகே இறந்து கிடந்தார். இது குறித்த புகாரில் போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.