பெரம்பலூர், ஜூன். 6: பெரம்பலூர் மதரசா சாலையில் உள்ள மௌலானா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் முகம்மது இலியாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் சாதிக்,
மாவட்ட தொண்டரணி செயலாளர் பீர் முஹம்மது, அப்துல் அஜீஸ், முஹமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகநீதி படைப்பாளர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரும்பாவூர் தாஹிர் பாட்சா கல்வியின் மேன்மை குறித்து சிறப்புரையாற்றினார். முஹிபுல்லா, சபீர், சாகுல் ஹமீது, முஸ்தபா, ஜாபர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கம் அளித்துப் பேசினர். தொடர்ந்து பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. முகமது அனிபா நன்றி கூறினார்.