திருப்பரங்குன்றம், ஆக. 22: ராஜிவ்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் அருகே அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜ‘ிவ்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் 10 மற்றும் 11ம் வகுப்பில் அரசு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு ராஜிவ்காந்தி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் பள்ளிக் கல்விதுறை அலுவலர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோர், கொல்கத்தாவில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.