வளசரவாக்கம்: அதிகாலையில் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ஐடி நிறுவன ஊழியரை, தனியாக அழைத்து சென்று மிரட்டி ஜி-பே மூலம் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற, திருநங்கைகள் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை ஆழ்வார்திருநகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குருசாமி (28). மென் பொறியாளரான இவர், ராமாபுரத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 25ம் தேதி இரவு காசி திரையரங்கில் சினிமா பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் 100 அடி சாலையில் உள்ள கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த 2 திருநங்கைகள் உட்பட 3 பேர், குருசாமியிடம் பேச்சு கொடுப்பதுபோல் தனியாக அழைத்து சென்றுள்ளனர். பிறகு குருசாமியை மிரட்டி அவரின் இருந்து ஜி-பே மூலம் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த பொறியாளர் உடனே சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பொறியாளர் டீ குடித்த கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை எடுத்து பார்த்தபோது, குருசாமியை திருநங்ககைள் உட்பட 3 பேர் தனியாக அழைத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைதொடர்ந்து, 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஜி-பே மூலம் பணத்தை பறித்த செல்போன் எண்ணை வைத்து தேடி வருகின்றனர்….