கரூர், நவ. 19: அரவக்குறிச்சியில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தில் கலெக்டர் கலந்து கொள்கிறார். இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் நவம்பர் 20ம்தேதி அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள சின்னதாராபுரம், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி ஆகிய மூன்று குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.