ஓசூர், செப்.15: ஓசூர் மாநகர திமுக செயலாளரும், மேயருமான சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா 115வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (15ம்தேதி) காலை 9 மணிக்கு ஓசூர் மாநகர திமுக சார்பில், தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகரத்திற்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் திமுக மூத்த முன்னோடிகள் தவறாமல் கலந்து கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.