அண்ணாநகர், மே 26: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போன் செய்த பெண் ஒருவர், அண்ணாநகரில் பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி சூடு நடந்ததாக பதற்றத்துடன் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து உடனடியாக அண்ணா நகர் போலீசாருக்கு காவல் கட்டுப்பாட்டு அருகில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணா நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது வதந்தி என தெரியவந்தது. இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பெண் யார் என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.