நாமக்கல், ஆக.29: தமிழக காவல் துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள், காவலர்களுக்கு குடியரசு தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் தமிழக முதல்வரின் அண்ணா காவல் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், நாமக்கல் ஏடிஎஸ்பி தனராசு, சிறப்பு எஸ்ஐக்கள் அருள்முருகன், செல்வகுமார், ரவி, ஹசன், ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்ஐ காளியப்பன் ஆகியோருக்கு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, அண்ணா காவல் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனையடுத்து, அவர்கள் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணனை நேரில் சந்தித்து, அண்ணா பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
அண்ணா காவல் பதக்கம் பெற்ற போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
previous post