திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தொடர் விடுமுறையால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும், நவராத்திரி விழா நாளை நிறைவடைகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில், நவராத்திரி விழா தனிச்சிறப்பு மிக்கது. அதன்படி, நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து, தினமும் பல்வேறு அலங்காரங்களில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.