திருவண்ணாமலை, ஆக.18: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையாரின் தீவிர பக்தரான திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா, அடிக்கடி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். மேலும், திருவண்ணாமலை வருகையின்போது ரமணாஸ்ரமத்தை தரிசிப்பதையும், அங்கு தங்குவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று இசை அமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் முடித்ததும், கோயில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், திருமஞ்சன கோபுரம் வழியாக கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.