மதுக்கரை, ஜூலை 9: சேலம், கொச்சின் எல் அண்டு டி பைப்பாஸ் ரோட்டில் மதுக்கரை அருகேயுள்ள பாலத்துறை பிரிவில் உள்ள நான்கு ரோடு சந்திப்பில் விபத்துக்களை தடுப்பதற்காக கோவை மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட நவீன சிக்னல் அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் உடைந்து போனது. இதனை சரிசெய்ய தாமதம் ஆனது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவானது. இந்தநிலையில் உடைந்து போன சிக்னல் குறித்து நேற்று நம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இதனைத்தொடர்ந்து உடைந்து கிடந்த அந்த சிக்னல் நேற்று உடனடியாக மாற்றப்பட்டது. இதையடுத்து செய்தி வெளியிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வைத்த தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.