கோவை, ஜூன் 24: கோவை உக்கடம் என்எச் ரோடு பெருமாள் கோயில் வீதி ஜங்சனில் நேற்று ஆண் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுமார் 45 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.