சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் பதிவு பெற்று குழந்தைகள் இல்லங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் பள்ளி நிறுவனங்கள், மத அமைப்புகள் ஆகியன மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளை நடத்தி வருகின்றன. இவ்வாறு நடத்தப்படும் அனைதது விடுதிகளிலும் 7 குழந்தைகளுக்கு ஒரு கழிவறை 10 குழந்தைகளுக்கு ஒரு குளியலறையும், தண்ணீர் வசதியுடன் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் சுகாதாரமாக இருத்தல் வேண்டும்.
சமையல் கூடம், உணவு அருந்தும் இடம் சுத்தமாக இருத்தல் வேண்டும். சமையல் கூடத்தில் மாணவ, மாணவிகளை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. தங்குமிடம் விசாலமாகவும், போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதியுடன் இருத்த வேண்டும். பாதுகாப்பு, பராமரிப்பு உறுதி செய்யப்பட வேண்டும். 18வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இந்த அடிப்படை வசதிகள் கட்டாயம் இருத்தல் வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஏராளமான விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.