அயோத்தியாப்பட்டணம், செப்.3: அயோத்தியாப்பட்டணம் அடுத்த கோலத்துகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு(60). அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(56). இருவருக்கும் அருகருகே விவசாய நிலம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இரு குடும்பத்தினரும் தாக்கி கொண்டனர். அதில் அலமேலு, மாரிமுத்து இருவரும் படுகாயமடைந்து, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அலமேலு புகாரின் பேரில், மாரிமுத்து மகன் சிவராஜ்(20) என்பவரையும், மாரிமுத்து புகாரின் பேரில், அலமேலு மகன் சேட்டு(35) என்பவரையும், நேற்று கைது செய்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அடிதடி வழக்கில் இருவர் கைது
previous post