நன்றி குங்குமம் டாக்டர் டயட் டைரிஉணவை ரசித்து உண்பது வேறு… தேடிச் சுவைப்பது என்பதும் வேறு. ஆனால், சில நேரங்களில் உணவை உண்டே ஆக வேண்டும் என்ற கட்டாய உணர்வு; ஏற்படும் Craving என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அதிலும் எடை குறைப்பு போன்ற முயற்சியில் இருக்கும்போது இந்த உணவு வெறி நம்மை படுத்தி; எடுக்கும். இந்த Food craving-கினைக் கையாண்டு வெற்றி பெறுவது எப்படி?! நம் சந்தேகங்களுக்கு டயட்டீஷியன் கோவர்த்தினி பதிலளிக்கிறார்.எந்த உணவை பார்த்தால் க்ரேவிங் உண்டாகும்?சர்க்கரை உணவுகள், இனிப்புகள், சாக்லேட், சிப்ஸ், சீஸ், ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் இவைகளை பார்க்கும்போது க்ரேவிங்ஸ்; கட்டாயம் உண்டாகும்.பசி மற்றும் க்ரேவிங்ஸ்க்கு உண்டான வித்தியாசங்கள்?பசி நம் உடலில் ஏற்படும் ஒரு இயல்பான விஷயம். உணவு உண்டால் பசி போய்விடும். ஆனால், க்ரேவிங்ஸ் மனரீதியான ஒரு விஷயம். அது ஏதேனும் ஒரு; தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு மீது மட்டுமே கவனம் உண்டாகும். அந்த உணவை சாப்பிட்டால்தான் இந்த க்ரேவிங்க்ஸ் அடங்கும்.பசி எவ்வாறு உண்டாகும்?நம் உடலில் சுரக்கும் க்ரெலின்(Ghrelin) ஹார்மோன் ரத்தத்தில் கலந்து பசி உண்டாகிறது. அப்போது நாம் உணவு சாப்பிடவில்லை என்றால் ரத்தத்தில்; இருக்கும் சர்க்கரையின் அளவு குறைந்து மயக்கம் உண்டாகும். சக்தி இல்லாவிடில் போய்விடும். இந்த க்ரெலின் ஹார்மோன் முதலில் மூளையில் இருக்கும்; ஹைப்போதலாமஸ்(Hypothalamus) பகுதியைத் தொட்டு அதை செயல்படுத்தச் செய்யும். அதனால் Neuropeptide y அதிகரிக்கும்.பசி ஏற்படுவதற்கு காரணம் இந்த Neuropeptide y-தான். போதுமான அளவுக்கு உணவு உண்ட பின்னர் நாம் போதும் வயிறு நிரம்பியது என்று; சொல்லுவோம். அதற்கு காரணம் நம் உடலில் இருந்து வெளியிடும் லெப்டின்(Leptin), Neuropeptide y குறைக்கும் மற்றும் Propiamelano; cortin அதிகரித்து பசியைக் கட்டுப்படுத்தும். இது மூளைக்குச் சென்று சிக்னல் தரும். அதனால் நமக்குப் போதுமான அளவு உணவு உண்ட பின்னர் போதும்; வயிறு நிரம்பியது என்று கூறுவோம்.க்ரேவிங்க்ஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது?இரண்டு வகைகள் உண்டு. ஒன்று உடல்ரீதியாக கட்டுப்படுத்துவது. மற்றொன்று மனரீதியாகக் கட்டுப்படுத்துவது, உடல் மூலமாக கட்டுப்படுத்துவது வெளியே; செல்லும்போது சாக்லேட், இனிப்பு பொருட்கள் அல்லது ஜங்க் ஃபுட்ஸ் பார்க்கும்போது உடனே க்ரேவிங்க்ஸ் உண்டாகும். அப்பொழுது அங்கிருந்து நாம் சென்று; விட வேண்டும் அல்லது ஊட்டச்சத்து மிகுந்த வேறு உணவை உண்டு இந்த க்ரேவிங்க்ஸை கட்டுப்படுத்த முடியும். மனரீதியாக கட்டுப்படுத்துவது இது மிகவும்; கடினமான விஷயம்.நம் மனதை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. க்ரேவிங்க்ஸ் இருக்கும் உணவுகளை பார்த்து நமக்கு நாமே சொல்லிக்கொள்ள; வேண்டும். இந்த உணவுகளை சாப்பிட்டால் இதனால் ஏற்படும் பக்க விளைவுகளை நினைத்து மனதை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு நாம்; கட்டுப்படுத்திவிட்டால் நம்மால் எல்லா வகையான பிரச்னைகளையும் கட்டுப்படுத்த முடியும். கோபம், அழுகை மற்றும் சுய கட்டுப்பாடு.க்ரேவிங்க்ஸ் எவ்வாறு உண்டாகும்?க்ரேவிங்க்ஸ் உண்டாகும் உணவுகளை நாம் சாப்பிட்டால் அது மூளைக்குச் சென்று டோபமைன் (dopamine) வெளியிடும். டோபமைன் ஒரு நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்ஸ்(Neurotransmitter) அது இரத்தத்தில் கலந்து யோசிக்கும் திறமையை பாதிப்பு அடையச் செய்யும். ஆரோக்கியமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தை நிறுத்திவிடும். அதுமட்டும்; இல்லாமல் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த டோபமைன் அதிகரிக்கும்போது நாம் அதிகமாக உணவு சாப்பிடுவோம். அது நமக்கு சந்தோஷத்தை தரும்.கர்ப்ப காலத்தில் உண்டாகும் க்ரேவிங்க்ஸ்எல்லா பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் க்ரேவிங்க்ஸ் பிரச்னை உண்டாகும். இந்த க்ரேவிங்க்ஸ் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். சிலருக்கு இனிப்பு; உணவுகள் மீது க்ரேவிங்க்ஸ் உண்டாகும். சிலருக்கு அதிக உப்பு உள்ள உணவு, காரம் நிறைந்த உணவு என மாறுபடும். அவர்கள் இதை கட்டுப்படுத்தி; ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும்.க்ரேவிங்ஸைக் கட்டுப்படுத்தும் டிப்ஸ்* வீட்டில் ஜங்க் ஃபுட்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள். வாங்கியும் குவிக்காதீர்கள். அதற்குப் பதிலாக ஊட்டச்சத்து மிகுந்த பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை வீட்டில்; வைக்க வேண்டும். க்ரேவிங்க்ஸ் ஏற்படும்போது ஊட்டச்சத்து மிகுந்த உணவை சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது.* புரோபயாடிக் நல்ல பாக்டீரியா(Bacteria) செரிமானத்திற்கு நல்லது. இது க்ரேவிங்க்ஸைக் குறைக்கும்.* தூக்கமின்மையும் க்ரேவிங்ஸை உண்டாக்கும். எனவே, குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.* மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் க்ரேவிங்க்ஸ் குறையும்.– எஸ்.கே.பார்த்தசாரதி
அடங்காத உணவு வெறி…
79
previous post