சென்னை: தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை 2வது சந்து பகுதியை சேர்ந்தவர் விமல்சந்த் (50). இவர் அதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் 12 கிராம் கொண்ட தங்க டாலர் ஒன்றை இவரது கடையில் வைத்து 25 ஆயிரம் பெற்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் அதே வாலிபர் வந்து மற்றொரு டாலரை அடகு வைக்க முயன்றார். அதை சோதனை செய்தபோது தங்கம் முலாம் பூசப்பட்ட டாலர் என தெரியவந்தது. அவரை தேனாம் ேபட்டை போலீசில் ஒப்டடைத்தார். விசாரணையில், நடைபாதையில் வசிக்கும் பாலாஜி (30) என்பதும், இவர், போலி தங்க டாலர்களை பல கடைகளில் அடகு வைத்து மோசடி செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்தனர்….