தேன்கனிக்கோட்டை, பிப்.18: அஞ்செட்டியில் பாரம்பரிய எருது விடும் விழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருது விடும் விழா நடைபெறுகிறது. நேற்று முன்தினம், அலங்கரிக்கப்பட்டகாளை களை ஊர்வலமாக அழை த்து வந்து ஓட விட்டனர். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. காளைகள் ஓட்டத்தை காண அஞ்செட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். குறிப்பிட்ட இலக்கை விரைவாக ஓடி கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அஞ்செட்டியில் எருது விடும் விழா
0
previous post