நாகர்கோவில், செப். 3: கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10ம் தேதி காலை 11 மணிக்கு நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நடக்கிறது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம். அல்லது தங்கள் குறைகளை தபால் மூலமாக அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் செந்தில் குமார், அஞ்சலக கண்காணிப்பாளர், கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் 629001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். தபால் உறையின் முன்பக்க மேல்பகுதியில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் செப்டம்பர் 2024 என்று தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். புகார் மனுக்கள் வருகிற 5ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அஞ்சலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10ம் தேதி நடக்கிறது
previous post