மதுரை, மே 31: மதுரை மாவட்டத்தில் இந்திய அஞ்சல்துறையில் 2024-25 ஆண்டில் பல்வேறு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த அஞ்சலக ஊழியர்களுக்கு பாராட்டு விழா நேற்று மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பதக்ரவிராஜ் அரிச்சந்திரா தலைமை வகித்தார். பயிற்சி கண்காணிப்பாளர் ஆருஸிசர்மா, தல்லாகுளம் தலைமை முதுநிலை அஞ்சல் அதிகாரி நாகராஜன், போஸ்ட்பேமண்ட் வங்கி மேலாளர் லட்சுமிப்ரீத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல்துறை, போஸ்ட் பேமண்ட்வங்கி, தபால்பட்டுவாடா,விரைவு தபால் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களின் பணியை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை துணைஅஞ்சலக கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன், அருணாச்சலம் ஆகியோர் செய்திருந்தனர்.