சென்னை: ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் குமார் நடிக்கும் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதி லாக அஜித்தின் அடுத்த படத்தை மகிழ்திருமேனி அல்லது விஷ்ணுவர்தன் இயக்குவார் என்றும் நேற்று முன்தினம் முதல் சமூக வலைத்தங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவலை தொடர்ந்து டிவிட்டரில் ‘ஜஸ்டிஸ் விக்னேஷ் சிவன்’ என்ற பெயரில் ஹேஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது. இதுகுறித்து அஜித் தரப்பில் விசாரித்தபோது, ‘அஜித்துக்காக விக்னேஷ் சிவன் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதைக்கு லைகா புரொடக்ஷன்சும், அஜித்தும் ஒப்புதல் அளித்துவிட்டனர். ஆனால், இந்த படத்தின் பட்ஜெட் மிகவும் அதிகம் என்பதால், கதையை இன்னும் முழுமையாக டெவலப் செய்து நடிக்க அஜித் விரும்புகிறார். எனவே, இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அஜித் இன்னொரு படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார். தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அஜித், விக்னேஷ் சிவன் இணையும் படம் கைவிடப்படவில்லை’ என்று கூறப்பட்டது….