மதுராந்தகம், செ.4: செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பாமக சார்பில் கட்சியின் 35வது ஆண்டு விழா மற்றும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களையொட்டி அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் தொழுப்பேடு கிராமத்தில் கட்சி கொடியேற்றி நேற்று இனிப்பு வழங்கப்பட்டன. இதில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட தலைவர் குணசேகரன், பேரூர் செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் விஜி வரவேற்றார். செங்கல்பட்டு முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றினார். இதேபோன்று ஆத்தூர், சமத்துவபுரம், எடையாளம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி உள்ளிட்ட ஏழு இடங்களில் பாமக கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் அம்பலவாணன், சதாசிவம், சுரேஷ், உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.