பெ.நா.பாளையம், ஆக.30: கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சி 10வது வார்டு ரங்கசாமி வீதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதனை கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு பதிவு துறை சார்பதிவாளர் விமல்ராஜ், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் கலாசாந்தாராம், மாவட்ட பிரதிநிதி செந்தில் ராஜா, ஊராட்சி தலைவர் ரமேஷ் துணை செயலாளர் அசோக் குமார், கவுன்சிலர்கள் சதகத்துல்லா, சரவணன், நடராஜ் நிர்வாகிகள் சிவபாதம், கருணாநிதி, சேகர், ஸ்ரீதர், வேணுகோபால், சார்லஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.