வானூர், ஆக. 4: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மயிலம் சாலையில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் பாலாபிஷேகம் மற்றும் கூழ்வார்த்தல் நடந்தது. இதையடுத்து பெண் பக்தர்களால் விளக்கு பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரவில் வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அங்காளம்மன் கோயிலில் விளக்கு பூஜை
previous post