பந்தலூர், ஜூலை 3: பந்தலூர் அருகே கொளப்பள்ளி அங்கன்வாடி மையம் முறையாக செயல்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையம் முறையாக செயல்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
சனிக்கிழமை நாட்களில் முறையாக திறப்பதில்லை அதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் கேட்டால் அலுவலக பணிகள் இருப்பதாக அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து அங்கன்வாடி மையத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.