தொண்டி, மார்ச் 12: தொண்டியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா மற்றும் கட்டிடம் அரசுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தொண்டி அண்ணா நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த கட்டிட திறப்பு விழா தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் திருப்பதி, துணை தலைவர் அழகுராணி, திமுக நகர் செயலாளர் இஸ்மத் நானா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா காந்தி முன்னிலையில் சரோஜா பாபு திறந்து வைத்தார். கிழக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன், ரஜினி, ராஜேஷ், ரதீஷ், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி மேற்பார்வையாளர் மாலா நன்றி கூறினார்.
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
0
previous post