விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சங்கம் சார்பில் கடந்த அக்.20 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் முடிவில் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்களை அங்கன்வாடி ஊழியர்கள் திட்ட அலுவலரின் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்தர்ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள் துவக்கவுரை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் டெய்சி விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டசெயலாளர் தேவா கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் ஈடுபட்ட 1,220 பேரை போலீசார் கைது செய்தனர்.