விருதுநகர், ஆக.24: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025 தொடர்பான முன்னேற்பாடு பணிகளின் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளஅனைத்து வீடுகளுக்கும் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை அக்.18 வரை மேற்கொள்ள உள்ளனர். பணிகள் முடிவடைந்த பின்னர் அக்.29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அனைத்து வாக்காளர்களும் வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த வேண்டும்.