திருக்காட்டுப்பள்ளி, நவ.21: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சௌந்தர்யநாயகி உடனுறை அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆகும். இக்கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு108 சங்காபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது.
முன்னதாக அம்மன் சன்னதியில் கடங்கள் மற்றும் 108 சங்குகளில் காவிரிநீர்நிரப்பி, புஷ்ப அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் செய்யப்பட்டன. பின்னர் அக்னீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்று, புஷ்ப அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.