கந்தர்வகோட்டை, ஜூன் 10: கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிபட்டி கிராமம் பாலமுருகன் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதி விமர்சையாக திருவிழா நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிபட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாவித்து வரும் பாலமுருகன் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதி விமர்சையாக திருவிழா நடைபெற்றது. அன்றையதினம் பத்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினார். அதில், முலவருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை அபிஷேக ஆராதனை செய்தனர். விழா குழு சார்பில் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் செய்திருந்தனர்.