பெரம்பலூர்: அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு- பெரம்பலூர் அருகே சின்னாறில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம உதவி யாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப் பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னாறு பகுதியில், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்கூட்டம், சங்க மாநில தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பிரேம்குமார் வரவேற்றார்.கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.சென்னையில் வருவாய் ஆணையாளர்களை மாநில நிர்வாகிகள் சந்தித்து 7அம்ச கோரிக்கையை நிறைவேற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டதில், 3 கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுவதாகவும், மற்ற கோரிக்கைகளை படிப்படி யாக நிறைவேற்றுவதாகவும் கூறியது அனைவருக் கும் தெரிவிக்கப்பட்டது.