செய்முறைபருப்பை மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேகவைக்கவும். கீரையை நன்கு அலசி நீரை வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அகத்திக்கீரை சேர்த்து வதக்கவும். கீரை வெந்தவுடன் பின் வேகவைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.சாம்பார் பொடியின் பச்சை வாசனை போனதும் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். இப்போது சுவையான அகத்திக்கீரை சாம்பார் தயார். பொங்கல், சாதம், இட்லிக்கு இந்த சாம்பார் பெஸ்ட் காம்பினேஷன்.- ஏ.எஸ்.கோவிந்தராஜ், சென்னை.
அகத்திக்கீரை சாம்பார்
previous post