செய்முறை:அகத்திக்கீரையைப் பொடியாக நறுக்கி, பாசிப்பருப்புடன் உப்பு சேர்த்து அதிகம் தண்ணீர் இல்லாமல் (தண்ணீர் தெளித்து) வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்கள் தாளித்து சீரகம் போட்டு, வெந்த கீரை+பருப்பை தண்ணீரை ஒட்ட வடித்து போட்டு பிரட்டி தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி வைக்கவும். (உதிரி, உதிரியாக நன்கு வெந்து வதங்கி இருக்க வேண்டும் கீரை) வேண்டுமெனில் வெல்லம் அல்லது சர்க்கரை மிகச் சிறிய அளவு கடைசியாக சேர்த்து இறக்கி வைக்கலாம்.