summer,special,Eyes, skin, children, outdoors,Vellore, Vellore, Chennai, summer, sports, tourism, clothes, desserts,கண்கள்,சருமம்,குழந்தைகள்,வெளியே செல்பவர்கள்,ஆடைகள்,உணவுமுறை,வெயில், வேலூர், சென்னை,கோடை, விளையாட்டு,சுற்றுலா

கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிலும், குறிப்பிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரிக்கிறது வெயில். இதை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க குளிர் பிரதேசங்கள், மலை பிரதேசங்களை நோக்கி படையெடுக்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் உடலை மட்டும் பாதிப்பதில்லை. தோலையும் பெரிய அளவில் பாதிக்கிறது. சூரிய ஒளி வெப்பத்தின் காரணமாக வியர்வை அதிகம் ஏற்பட்டு உடலில் வேர்க்குரு, கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இதனால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.கோடை பிரச்சினையிலிருந்து நம்மை காக்க சில எளிய வழிகள்...

summer,special,Eyes, skin, children, outdoors,Vellore, Vellore, Chennai, summer, sports, tourism, clothes, desserts,கண்கள்,சருமம்,குழந்தைகள்,வெளியே செல்பவர்கள்,ஆடைகள்,உணவுமுறை,வெயில், வேலூர், சென்னை,கோடை, விளையாட்டு,சுற்றுலா

கண்கள்

ஏதாவது ஒரு பொருளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்றால் ‘கண் போல பார்த்துக்கணும்’ என்பார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு நம் கண். இரக்கமற்ற இந்த கோடை காலத்தில் நமது கண்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகம் உண்டு. இப்போது வெப்பத்தின் தீவிரத்தன்மை வேறு அதிகரித்துள்ளதால் கண் பிரச்னைகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை பற்றி சொல்கிறார் கண் சிறப்பு மருத்துவர்.

சருமத்தை பாதுகாப்பது எப்படி?

இப்போதே கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலோ மழையோ எதுவாக இருந்தாலும் முதலில் பாதிப்பு ஏற்படுவது சருமத்தில் தான். இதனை பாதுகாக்க தவறினால் பொலிவிழந்து சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வெயிலின் கொடுமையில் இருந்து சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று கூறுகிறார் சரும நிபுணர் டாக்டர் ஜெயஸ்ரீ ஷரத். ‘‘பொதுவாக சருமத்தை 4 வகையாக பிரிக்கலாம். 1.சாதாரண சருமம், 2.வறண்ட சருமம், 3.எண்ணை பசை 4.காம்பினேஷன் சருமம்.

summer,special,Eyes, skin, children, outdoors,Vellore, Vellore, Chennai, summer, sports, tourism, clothes, desserts,கண்கள்,சருமம்,குழந்தைகள்,வெளியே செல்பவர்கள்,ஆடைகள்,உணவுமுறை,வெயில், வேலூர், சென்னை,கோடை, விளையாட்டு,சுற்றுலா
summer,special,Eyes, skin, children, outdoors,Vellore, Vellore, Chennai, summer, sports, tourism, clothes, desserts,கண்கள்,சருமம்,குழந்தைகள்,வெளியே செல்பவர்கள்,ஆடைகள்,உணவுமுறை,வெயில், வேலூர், சென்னை,கோடை, விளையாட்டு,சுற்றுலா

வெயில் காலத்தில் பிள்ளைகளை பாதுகாப்பது எப்படி?

வெயில் காலம் விடுமுறைக்காலம். ஊருக்கு போவது, நண்பர்களை சந்திப்பது, பழைய நண்பர்களை சந்திப்பது என்று பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால் பெரியவர்களுக்கு தான் அவர்களை சமாளிப்பது திண்டாட்டமான விஷயம்.வெயில் காலத்தில் சிறுகுழந்தைகளுக்கு மெலிதான பருத்தி ஆடைகளை அணிவியுங்கள். காற்றோட்டமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

summer,special,Eyes, skin, children, outdoors,Vellore, Vellore, Chennai, summer, sports, tourism, clothes, desserts,கண்கள்,சருமம்,குழந்தைகள்,வெளியே செல்பவர்கள்,ஆடைகள்,உணவுமுறை,வெயில், வேலூர், சென்னை,கோடை, விளையாட்டு,சுற்றுலா summer,special,Eyes, skin, children, outdoors,Vellore, Vellore, Chennai, summer, sports, tourism, clothes, desserts,கண்கள்,சருமம்,குழந்தைகள்,வெளியே செல்பவர்கள்,ஆடைகள்,உணவுமுறை,வெயில், வேலூர், சென்னை,கோடை, விளையாட்டு,சுற்றுலா summer,special,Eyes, skin, children, outdoors,Vellore, Vellore, Chennai, summer, sports, tourism, clothes, desserts,கண்கள்,சருமம்,குழந்தைகள்,வெளியே செல்பவர்கள்,ஆடைகள்,உணவுமுறை,வெயில், வேலூர், சென்னை,கோடை, விளையாட்டு,சுற்றுலா

வெளியே செல்பவர்கள் மற்றும்
விளையாடுப்பவர்கள் கவனிக்க..

வெயிலில் விளையாடும் குழந்தைகளின் சருமம் கருக்குமா?
அதற்காக அவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டுமா?
குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது அவசியம். அப்போதுதான் வைட்டமின் டி குறைபாடு வராமல் இருக்கும். காலை வெயிலும் மாலை வெயிலும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே ஏற்றவை. 12 மணி முதல் 3 மணி வரையிலான வெயிலைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

முடிந்த வரை காலை 10 முதல் 3மணி வரை வெயிலில் அதிகம் அலைவதைத் தவிர்க்கவும். அப்படியே தவிர்க்க முடியாத பட்சத்தில் சருமத்துக்கு சன் ஸ்கீரின், கைகளுக்கு கிளவுஸ், தலைக்கு தொப்பி, கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிவது பாதுகாப்பானது. யுவி கதிர்களின் பாதிப்பிலிருந்து கண்ணை பாதுகாப்பது அவசியம். இல்லாவிட்டால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சுருக்கங்கள் விழலாம். சன் ஸ்கீரினை எப்போதும் வெளியில் கிளம்புவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக தடவவும். வெயில் காலத்தில் மேக்கப் தவிர்ப்பது நல்லது. அவசியம் மேக்கப் போட்டே ஆக வேண்டும் என்பவர்கள் வாட்டர் பேஸ்டு பவுண்டேஷன் அல்லது காம்பேக்ட் மட்டும் உபயோகிக்கலாம். மிக லைட்டான ஷேடுகளில் லிப்ஸ்டிக் போடவும். கண்களுக்கு அதிக மேக்கப் வேண்டாம்.

summer,special,Eyes, skin, children, outdoors,Vellore, Vellore, Chennai, summer, sports, tourism, clothes, desserts,கண்கள்,சருமம்,குழந்தைகள்,வெளியே செல்பவர்கள்,ஆடைகள்,உணவுமுறை,வெயில், வேலூர், சென்னை,கோடை, விளையாட்டு,சுற்றுலா summer,special,Eyes, skin, children, outdoors,Vellore, Vellore, Chennai, summer, sports, tourism, clothes, desserts,கண்கள்,சருமம்,குழந்தைகள்,வெளியே செல்பவர்கள்,ஆடைகள்,உணவுமுறை,வெயில், வேலூர், சென்னை,கோடை, விளையாட்டு,சுற்றுலா

வெயில் காலத்தில் அணிய வேண்டிய ஆடைகள்

ஆடை விஷயங்களுக்கு இதர காலங்களில் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ இல்லையோ, கோடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சூரிய வெப்பத்தால் ஏற்படும் வியர்வை உடல் மடிப்பு, கை, கால் இடுக்குகளில் ஆடையுடன் படிந்துவிட்டால் கொப்பளங்களுக்கு வழிவகுக்கும். மேலும், பாலிஸ்டர் ஆடைகள் அணிந்தால், அவை வெயிலின் தாக்கத்தை அதிகப்படுத்தி உடலை பாதிக்கும். கருப்பு போன்று மங்கிய ஆடைகளுக்கு ஒளி

மற்றும் வெப்பத்தை உட்கிரகிக்கும் தன்மை அதிகம். அதனால், இதுபோன்ற ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகள், மெல்லிய இழைகளால் ஆன ஆடைகளை அணியலாம். எடை குறைந்த ஆடைகளையும் அணியலாம்.

summer,special,Eyes, skin, children, outdoors,Vellore, Vellore, Chennai, summer, sports, tourism, clothes, desserts,கண்கள்,சருமம்,குழந்தைகள்,வெளியே செல்பவர்கள்,ஆடைகள்,உணவுமுறை,வெயில், வேலூர், சென்னை,கோடை, விளையாட்டு,சுற்றுலா

உணவுமுறை

அதிக வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்வாட்டர் ஆகியவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக கோடையில் கிடைக்கக்கூடிய காய், கனிகளை உண்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் நாம் தப்பித்துக்கொள்ளலாம்.

Copyright © 2018 all rights reserved to Kal Publications
Email: dotcom@dinakaran.com