Make as Homepage
E-paper | Font | Site Map
ê¡ °¿ñˆFL¼‰¶ ªõOõ¼‹ îIöèˆF¡ No.1 裬ô ï£Oî›
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema


 
 
 

மாணவர்களிடையே மோதல்: போலீசார் விசாரணை

Updated  3/16/2010 11:06:57 AM

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே இறச்சகுளம் தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சன் பொறியியல் கல்லூரியில் தமிழ் மற்றும் கேரளா மாணவர்களிடையே நீண்டகாலமாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. திங்களன்று நள்ளிரவில் இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஹாக்கி மட்டைகளால் மாணவர்களை அடித்துள்ளனர். காயமடைந்த கேரளா மாணவர்கள் 15 பேரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டது தமிழ் மாணவர்கள் என்று கேரளா மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவர்களிடையே நடந்த மோதல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி வேன் விபத்து: மாணவர்கள் படுகாயம்

Updated  3/16/2010 10:39:05 AM

பேராவூரணி: பேராவூரணி அருகே பள்ளி வேன் தலைகீழாக கவிழ்ந்ததில் மாணவர்கள் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வரும் வழியில் சஞ்சமங்கலத்தில் நடந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முற்றுகை போராட்டம்: பாசி நிதி நிறுவன மோசடி

Updated  3/16/2010 10:24:36 AM

திருப்பூர்: திருப்பூர் பாசி நிதி நிறுவன அதிபர் வீட்டை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.500 கோடியை மோசடி செய்துள்ளதாகவும் 4 மாதத்திற்கு முன்பே பாசி நிதி நிறுவனத்தை மூடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதிபர் கதிரவன் வீட்டை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரோவில் பதற்றம்: திடீரென நடந்த துப்பாக்கி சூடு !

Updated  3/16/2010 10:11:30 AM

பெங்களூர்: பெங்களூர் பியலாலூவில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மையத்திற்கு எதிரே திடீரென துப்பாக்கி சூடு நடந்ததால் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் சந்தேகத்தின் பேரில் 2 நபரை நிறுத்தி பாதுகாப்பாளர்கள் விசாரணை நடத்தினர். திடீரென பாதுகாப்பாளர்கள் நோக்கி மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது இருவரும் தப்பி ஓடிவிட்டதாக தெரியவந்துள்ள-து. பாதுகாப்பாளர்களுக்கு எதிராக நடந்த திடீர் தாக்குதலால் இஸ்ரோவில் பதற்றம் நிலவி வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி டெவில்ஸ் வெற்றி

Updated  3/16/2010 8:48:14 AM

அகமதாபாத்: ஐ.பி.எல் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இன்று நடை பெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் அடிய டெல்லி டெவில்ஸ் அணி 4 விக்கெட் மட்டும் இழந்து 142 வெற்றி கனியை பறித்தது.. இது அந்த அணி பெற்ற இரண்டாவது வெற்றியாகும்.

செப் 2 -3-ல் ரஜினி மகள் திருமணம்

Updated  3/15/2010 7:59:24 PM

ரஜினி மகள் சௌந்தர்யா ரஜினி திருமணம் செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடக்கிறது. ரஜினிகாந்த் - லதா தம்பதியினரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் ராம்குமார் திருமணம் பிப்ரவரி 17-ம் தேதி நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் திருமணத் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை. இப்போது வரும் செப்டம்பர் மாதம் 2 மற்றும் 3-ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா ஹாலில் திருமணம் நடக்கிறது

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலை மையங்கள்- அமைச்சரவை ஒப்புதல்

Updated  3/15/2010 7:39:29 PM

டெல்லி: வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தங்களின் கிளைகளை தொடங்களும் பட்டங்கள் வழங்கவும் வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் (நுழைவு கட்டுப்பாடு மற்றும் செயல்பாடுகள்) சட்டமசோதா 2010 என்ற இந்த சட்டமசோதா, மத்திய அமைச்சரவையில் இன்று ஒப்புதல் பெறப்பட்டு, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் குறிப்பிடுகையில், 'உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் தரத்தை உயர்த்தவும், போட்டியை உருவாக்கவும், மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் இந்த சட்டம் வகை செய்யும். கல்வித் துறையில் 100 விழுக்காடு வெளிநாட்டு முதலீடு இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், தற்போதைய சட்ட முறைப்படி வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் பட்டங்கள் வழங்க அனுமதிக்கப்படாது. ஆனால், தற்போதைய திருத்த மசோதாவின் மூலம் தரமான சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவின் உயர்கல்வித் துறையில் இணைந்து செயல்பட முடியும். யூஜிசி மூலம் தெரிவு செய்யப்படும் சர்வதேச கல்வி நிறுவனங்கள் தங்களின் மையங்களை இந்தியாவில் திறந்து மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பட்டங்களை வழங்கலாம். இந்திய உயர்கல்வித்துறையில் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்' என்றார்

பென்னாகரத்தில் விஜயகாந்த் 5 நாள் பிரச்சாரம்

Updated  3/15/2010 7:37:34 PM

பென்னாகரத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் 5 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 27 ந்தேதி நடை பெறவுள்ள பென்னாகரம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில், தே.மு.தி.க. வேட்பாளர், மாவட்ட கழக பொருளாரும், வக்கீலுமான கே.ஜி.காவேரிவர்மனை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வருகிற 21, 22, 23, 24, 25 ஆகிய 5 நாட்கள் பென்னாகரம் தொகுதி முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்கிறார் என்று கூறப்பட்டுள்ளது

மீண்டும் நித்தியானந்தா வெளியிட்ட புது சி.டி.

Updated  3/15/2010 3:21:20 PM

சுவாமி நித்தியானந்தா தற்போது புதிய வீடியோ சி.டி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தன் மீதான சர்ச்சைகள் குறித்து விரைவில் பெங்களூருக்கு வந்து விளக்கம் தருவதாகவும் மேலும் தன் மீதான மோசடிப் புகார்கள் அனைத்திற்கும் தகுந்த பதில் அளிப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் சட்டரீதியாக எந்த தவறையும் செய்யவில்லை என்றும் சி.டி.யில் குறிப்பிட்டுள்ளார்.

அணு விபத்து இழப்பீடு மசோதா தாக்கல் இல்லை: அத்வானி கேள்வி

Updated  3/15/2010 12:56:33 PM

புதுடெல்லி: இன்று தாக்கல் செய்யப்படவிருந்த அணு விபத்து இழப்பீடு மசோதா மக்களவையில் எதிர்கட்சிகள் ஏற்படுத்திய எதிர்ப்பின் எதிரொலியாக தாக்கல் செய்யப்படவில்லை. இதனையடுத்து மசோதா இன்று தாக்கல் செய்யப்படமாட்டாது என்று சபாநாயகர் மீராகுமார் தெரிவித்துள்ளார். மேலும் மசோதா ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என்று அத்வானி கேள்வியும் எழுப்பியுள்ளார்.

கூடுதல் பாதுகாப்பு

Updated  3/15/2010 12:16:15 PM

சென்னை: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று எஸ்.எம். கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் வாழும் இந்தியர்களை தொடர்ந்து குறிவைத்து தாக்குதலின் எதிரொலியாக அவர் இதை தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் பெயர் பலகை!

Updated  3/15/2010 12:03:29 PM

சென்னை: சென்னையிலுள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டுமென்று மேயர் வலியுறித்தியுள்ளார். மேலும் 6 இடங்களில் லிப்ட் வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படுமென்றும், 9 இடங்களிலுள்ள பாலங்கள், சுரங்கப் பாதைகள் அழகு படுத்தப்படுமென்றும் அறிவித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் ஆர்கிட் மலர் தோட்டம் போன்றே மெரீனாவில் 1 ஏக்கர் பரப்பளவில் பூங்காவும் , வட சென்னையில் மாற்று திறனுடையோரின் நலனுக்காக சிறப்புப் பள்ளியும், சொத்து வரி செலுத்த புதிதாக 10 மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

Updated  3/15/2010 11:43:06 AM

சென்னை: சென்னை மாநகராட்சி 2010-2011 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி மேயர் மா. சுப்ரமணியன் தாக்கல் செய்துள்ளார். இதில் மொத்த வரவு 1787.90 கோடி, செலவு 1789.03 கோடி, பற்றாக்குறை 1.13 கோடி ஆகும். மேலும் தென் சென்னையில் 200 படுக்கைகள் கொண்ட தோற்று நோய் மருத்துவமனைகள் அமைக்கப்படுமென்றும் மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெறும் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆற்றில் வேன் கவிழ்ந்தது: 26 மாணவர்கள் பலி

Updated  3/15/2010 10:51:18 AM

ராஜஸ்தான்: ராஜஸ்தானை அடுத்த சவாய் மதோபூர் என்ற இடத்தில் வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் 26 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து ஆற்றுப்பாலத்தில் வரும்போது எதிரே வந்த பஸ்சில் மோதியதில் வேன் ஆற்றுக்குள் விழுந்தது. மாணவர்கள் ஆக்ராவிற்கு சுற்றுலா சென்று திரும்போது இந்த விபத்து நடந்துள்ளது. மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி கல்லூரி மாணவர்கள் ஆவர். மேலும் இந்த விபத்தில் 29 பேர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொருட்காட்சி நிறைவு!

Updated  3/15/2010 10:29:42 AM

சென்னை: சென்னை தீவுத்திடலில் கடந்த 80 நாட்களாக போடப்பட்டிருந்த சுற்றுலா பொருட்காட்சி நிறைவு பெற்றுள்ளது. இதில் 17 லட்சம் பேர் சுற்றுலாப் பொருட்காட்சியை கண்டுகளித்து மகிழ்ந்துள்ளனர். இதன்மூலம் 4.46 கோடி வசூல் ஆகி உள்ளது. மேலும் இந்த சுற்றுலா கண்காட்சி மூலம் சுற்றுலா துறைக்கு 2 கோடி 7 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.

கல்வி அடிப்படை உரிமை

Updated  3/15/2010 10:17:07 AM

கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுத் தலைவர்களுக்கும் மத்திய அரசு நிபந்தனை கூறியுள்ளது. மேலும் எவ்வளவு தூரத்தில் பள்ளிகள் அமைகிறது என்றும் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் பள்ளிகள் அமைய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். இதன்படி ஏப்ரல் 1ந்தேதி முதல் கல்வி அடிப்படை உரிமை சட்டம் அமலுக்கு வருகிறது என்றும் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்3 : 3கேப்டன்களுக்கு அபராதம்

Updated  3/15/2010 9:42:07 AM

மும்பை:ஐபிஎல் தொடரில் களமிறங்கும் அணிகள், குறிப்பிட்ட நேரத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசி முடிக்காமல் தாமதம் செய்வது தொடர் கதையாகி உள்ளது.வழக்கமாக டி20 போட்டிகள் 3 மணி நேரத்தில் முடிந்துவிடும்.ஆனால், ஐபிஎல் சீசன் 3 தொடரில் எல்லா போட்டிகளுமே 4 மணி நேரத்துக்கு நீடிக்கிறது. போட்டிகள் கடைசி ஓவர்/ பந்து வரை பரபரப்பாக நீள்வதுடன், எதிரணியை வீழ்த்துவதற்காக வியூகம் அமைப்பதில் கேப்டன்கள் நேரம் எடுத்துக் கொள்வதும் இதற்கு காரணமாகிறது. தொடக்க போட்டியில் தாமதமாகப் பந்துவீசியதால், கொல்கத்தா அணி கேப்டன் கங்குலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சச்சின், டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கம்பீர், பஞ்சாப் கிங்ஸ் லெவன் கேப்டன் சங்கக்கரா ஆகியோருக்கும் இதே காரணத்துக்காக தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர்கள் துபாய் சிறைகளில் வாடும் தூக்குத் தண்டனை கைதிகள்

Updated  3/15/2010 9:37:35 AM

துபாய்:துபாய் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக வாடிக் கொண்டுள்ளார் பால் ஜார்ஜ் நாடார் என்ற இந்தியர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அவர் கருணை மனு தாக்கல் செய்துள்ளார். கருணை மனு அவருக்கு விடிவைத் தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுபோல் பலரும் சிறைகளில் அடைக்கப்பட்டு விடிவுக்கு காத்திருக்கின்றனர்.இப்பொழுது தூக்குத்தண்டனைக் கைதியாக சிறையில் வாடும் பால் ஜார்ஜ் தான் நீண்ட காலமாகச் சிறையில் உள்ள கைதி என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. துபாய் நகரில் இருக்கும் பொழுது பாகிஸ்தானைச் சேர்ந்த சிலருடன் இவருக்கு சண்டை ஏற்பட்டது. அவர்கள் வசித்த குடிசை வீட்டுக்கு பால் ஜார்ஜ் தீவைத்துக் கொளுத்தினார். இந்த தீவைப்புச் சம்பவத்தில் இரண்டு பெண்களும் 7 குழந்தைகளும் உயிரிழந்தனர். ஜார்ஜுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பால் ஜார்ஜ் சிறையில் அடைக்கப்பட்டார். 2009ல் இந்திய தூதரகம் மூலமாக துபாய் அரசுக்கு கருணை மனு ஒன்றை பால் ஜார்ஜ் அனுப்பி உள்ளார். அந்தக் கருணை மனுவுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார் அவர். பால் ஜார்ஜுக்கு அடுத்தபடியாக நீண்டநாள்களாக சிறையில் அனில் மொட்யாதி அதோ. ஒருவரிடமிருந்து பணத்தை பறிக்க அனில் முயற்சிக்கும் பொழுது கைகலப்பில் மற்றவர் இறந்துவிட்டார். இதைத் தவிர பல திருட்டுப் புகார்களும் அனில் மீது உண்டு. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அனில் கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.2002ம் ஆண்டு தனது சித்தப்பாவைக் கொன்றதற்காக ஏமன் நாட்டவர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு யாருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பால் ஜார்ஜ், அனில் உள்பட 7 இந்தியர்கள் தூக்குத் தண்டனை கைதிகளாக துபாய் சிறையில் பரிதவித்துக் கொண்டுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட்: டெக்கான் சார்ஜர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Updated  3/15/2010 6:17:14 AM

3வது ஐபில் 20 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.இதன்படி முதலில் களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது. அந்த அணியின் சைமண்ட்ஸ் அதிகபட்சமாக 50 ரன் எடுத்தார்.191 ‌ரன் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 மட்டுமே எடுத்து தோற்றது. இதன் மூலம் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 31 ரன் வித்தியாசத்தில் தொடரின் முதல் வெற்றி பெற்றது.

பென்னாகரத்தில் ஜெயலலிதா பிரசாரம்!

Updated  3/15/2010 6:16:51 AM

பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27ந் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அமைச்சர்கள் கட்சிதலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். தி.மு.க. வேட்பாளர் இன்பசேகரனுக்கு ஆதரவு திரட்டி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் இந்த வார இறுதியில் பிரசாரம்செய்ய இருக்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பென்னாகரத்தில் பிரச்சாரம்செய்வது குறித்து இன்னும் முடிவாகவில்லை.அ.தி.மு.க. சார்பில்போட்டியிடும் வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இந்த வார இறுதியில் பிரசாரம் செய்ய இருப்பதாகஅதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தாவுக்கு 2வது வெற்றி

Updated  3/15/2010 6:16:13 AM

கொல்கத்தா: கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை நேற்று வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசியது. பெங்களூர் தொடக்க வீரர்களாக காலிஸ், கோஸ்வாமி களமிறங்கினர். கோஸ்வாமி 8, பாண்டே 0, கோஹ்லி 2 ரன்னுடன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பெங்களூர் அணி தடுமாறியது. மார்கன் 10, டிராவிட் 21, உத்தப்பா 20 ரன் எடுத்தனர். பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்தது. காலிஸ் 65 (52 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), பிரவீன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் மேத்யூஸ் 4 (4&0&19&4), முரளி கார்த்திக் 2, லாங்கவெல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஹாட்ஜ் & திவாரி ஜோடி சிறப்பான தொடக்கத்தை (11.4 ஓவர், 101 ரன்) கொடுத்தது. அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். திவாரி 50 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹாட்ஜ் 50 ரன் (45 பந்து, 7 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கங்குலி 23 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார். கொல்கத்தா 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ஆட்டநாயகன்: மனோஜ் திவாரி.

திருப்பதி ஜீயர் மரணம்

Updated  3/15/2010 6:03:24 AM

திருமலை:  திருப்பதி தேவஸ்தானத்தின் பெரிய ஜீயர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த 4 நாட்களுக்கு முன் திருப்பதி சின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 90.
அவருடைய உடல் திருப்பதியில் உள்ள பெரிய ஜீயர் மடத்துக்கு எடுத்து வரப்பட்டது. 
தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு, தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணாராவ், இணை அதிகாரி தர்மாரெட்டி உட்பட தேவஸ்தான அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். 
பிற்பகல் 3.30க்கு தேவஸ்தான தலைமை அலுவலகத்துக்கு அருகே உள்ள பிருந்தாவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
பெரிய ஜீயர் முதலில் திருப்பதி தேவஸ்தானத்தில் சின்ன ஜீயராக பொறுப்பு வகித்தார். அப்போது அவர் தேவஸ்தானத்துக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து பல்வேறு சேவைகளை செய்தார். இதையடுத்து  திருமலை தேவஸ்தானம் அவருக்கு பெரிய ஜீயர் பட்டத்தை வழங்கியது.

சச்சின், காம்பீருக்கு 10 லட்சம் அபராதம்

Updated  3/14/2010 2:47:47 PM

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த 2 போட்டியிலும் மெதுவாக பந்து வீசப்பட்டது.
 
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் தெண்டுல்கர், டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் காம்பீர், கிங்ஸ் லெவன் கேப்டன் சங்ககரா ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடக்க ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கங்குலிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

இந்தோனேசியாவில் பயங்கர நில நடுக்கம்

Updated  3/14/2010 2:19:55 PM

இந்தோனேசியா நாட்டில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை 7.57 மணிக்கு அங்குள்ள மலுகு தீவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
கட்டிடங்கள், வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள். கடலை ஒட்டியுள்ள பகுதியில் பூமிக்கு அடியில் 56 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்க மையம் இருந்தது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 7 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
 
எனவே “சுனாமி” தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. பின்னர் சுனாமி தாக்குதல் மெல்லிய அளவிலேயே இருக்கும். இதனால் பாதிப்பு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சுனாமி தாக்குதல் எதுவும் நிகழவில்லை.
 
நிலநடுக்கத்தால் சேதம் ஏதுவும் ஏற்பட்டதா என்று இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் அளவு 7 புள்ளிகளாக பதிவாகி இருப்பதால் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது

உயிர் தப்பினார் முலாயம் சிங்

Updated  3/14/2010 2:19:26 PM

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங், டில்லியில் இருந்து சொந்த ஊருக்கு நேற்று விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். 

அப்போது விமான ஓடுதளத்தில் சைக்கிள் ஒன்று உள்ளே புகுந்தது. இருப்பினும் விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் முலாயம் சிங் 

சேப்பாக்கத்துக்கு சிறப்பு ரயில், பஸ்கள்

Updated  3/14/2010 2:19:06 PM

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ஆட்டங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன.
 
கிரிக்கெட் போட்டியை யொட்டி சேப்பாக்கம் மார்கத்தில் சிறப்பு பறக்கும் ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை- வேளச்சேரி இடையே இயக் கப்படும் சிறப்பு ரெயில்கள் விவரம்:-
 
கடற்கரையில் இருந்து இரவு 7.10 மணிக்கு முதலா வது சிறப்பு ரெயில் புறப்பட்டு (சேப்பாக்கம் இரவு 7.20) வேளச்சேரிக்கு இரவு 7.50 மணிக்கு சேரும்.
 
2-வது சிறப்பு ரெயில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு (சேப்பாக்கம் இரவு 7.40) 8.10 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.
 
கடற்கரையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு (சேப்பாக்கம் 11.40) நள்ளிரவு 12.10 மணிக்கு வேளச்சேரி செல்லும். கடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு (சேப்பாக்கம் 11.50) நள்ளிரவு 12.20 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.
 
வேளச்சேரியில் இருந்து மாலை 6.55 மணிக்கும், இரவு 7.15 மணிக்கும், இரவு 11.15 மணிக்கும், இரவு 11.25 மணிக்கும் கடற்கரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் சேப்பாக்கத்துக்கு இரவு 7.21, இரவு 7.41, இரவு 11.41, இரவு 11.51 மணிக்கு வந்து சேரும். 
 
இதே போல 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேரத்தில் மட்டும் 45 பஸ்கள் இயக்கப்படுகிறது. அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ்கள் சேப்பாக்கத்துக்கு வரவழைக்கப்பட்டு சென்னை முழுக்க இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் ஸ்டேடியம் முன்பு உள்ள ரோட்டில் நிறுத்தப்படும்.

தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் கமாண்டோ படை கொச்சியில் குவிப்பு

Updated  3/14/2010 8:40:57 AM

திருவனந்தபுரம்: கொச்சியில் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், நகரம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவன் சல்மான் அகமதுவை (23), உத்தர பிரதேசத்தில் கடந்த 6ம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. 2008ம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு, வாரணாசி நீதிமன்ற குண்டு வெடிப்பு, 2007 கோரக்பூர் குண்டு வெடிப்பு ஆகியவற்றில் இவனுக்கு தொடர்பு இருப்பதும், கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. மும்பையில் நடத்தப்பட்டது போல் கடலோர நகரமான கொச்சியில் தாக்குதல் நடத்த லஷ்கர்&இ&தொய்பா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டு இருப்பதையும் அகமது தெரிவித்தான். இதனால், கொச்சியில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி கேரள அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை உத்தரவிட்டார். கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இன்போ பார்க், உயர் நீதிமன்றம், கொச்சி மட்டாஞ்சேரியில் உள்ள புராதன கிறிஸ்தவ ஆலையம், ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் கமாண்டோ பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்தும் கூடுதலாக 40 கமாண்டோ படை அழைக்கப்பட்டு உள்ளது.

நித்யானந்தா ஒப்புதல் வீடியோ காட்சியில் இருப்பது நான்தான்

Updated  3/14/2010 8:40:09 AM

புதுடெல்லி: “வீடியோ காட்சியில் நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நான்தான்Ó என்று சாமியார் நித்யானந்தா ஒப்புக் கொண்டுள்ளார். கும்பமேளாவுக்கு சென்றிருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 33 ஆண்டு பொது வாழ்க்கையில் புகழின் உச்சியை பார்த்துவிட்டேன். கடந்த சில நாட்களாக மிக அதிகமான அவமானத்துக்கும் ஆளாகி விட்டேன். வாழ்க்கையில் புதிய பாடம் கற்றுக் கொண்டேன். வீடியோ காட்சியில் இருப்பது நான்தான். அதெல்லாம் எப்படி யாரால் எடுக்கப்பட்டது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறேன். அதில் வரும் நடிகை ரஞ்சிதா எனது சீடர். நீண்ட காலமாக எனக்கு சேவை செய்து வருகிறார். இன்னும் எனக்கு சேவை செய்வார். இச்சைகளை அடக்க வேண்டும் என்று சொல்வேன். ஆனால், பிரம்மச்சாரியாக இருப்பதா வேண்டாமா என்று யாருக்கும் நான் சொன்னதில்லை. அதை அவரவர்தான் முடிவு செய்யவேண்டும். வேறு ஒருவரின் துணையின்றி மனதை அடக்க முடியும் என்றால் பிரம்மச்சரியத்தை பின்பற்றலாம். இன்னொருவரின் உதவி தேவையென்றால் மண வாழ்க்கையில் ஈடுபடலாம். நான் சிற்றின்பத்துக்கு ஆசைப்படவில்லை. வீடியோ எடுத்தது யார், இதன் பின்னணியில் இருப்பது யார் என்று விசாரித்து வருகிறேன். விவரம் தெரிந்ததும் வெளியிடுவேன். என்னுடைய அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகமாக இல்லை. அடுத்தவரின் தனி வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது.

சேலம், ஈரோடு, கோவை ரயில் நிலையங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்

Updated  3/14/2010 8:39:25 AM

சேலம்: வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சேலம், ஈரோடு, கோவை ரயில் நிலையங்களில் போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினர். ஈரோடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, சேலம், ஈரோடு, கோவை ஆகிய ரயில் நிலையங்களில் இன்னும் சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து, சேலம் ரயில்வே டி.எஸ்.பி. ராஜவேல் தலைமையில் போலீசார், சேலம், ஈரோடு, கோவை ஆகிய ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஸ்கேனர் கருவி மூலம் பயணிகளின் உடமைகளும் பரிசோதிக்கப் பட்டது. சேலம் ரயில்நிலையத்தில் ரயில்வே இன்ஸ்பெக்டர் பாபு, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரயில் நிலைய முகப்பு பகுதியில் டோர் பிரேம் அமைத்து பயணிகளின் உடமைகள் பரிசோதிக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க பிரிவு காவல்துறையி னர், ரயிலுக்காக நடைமேடையில் இருக்கும் பயணிகள், ரயிலில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை பரிசோதித்தனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து ரயில்நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

புதிய பேரவை கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார் கருணாநிதிக்கு புகழாரம்

Updated  3/14/2010 8:38:45 AM

சென்னை, மார்ச் 14: ஐநூறு கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள தமிழக சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று திறந்து வைத்தார். கோலாகலமாக நடந்த விழாவில் பேசிய பிரதமரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் இந்த மாபெரும் கட்டிடம் உருவாக காரணமாக இருந்த முதல்வர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர். தமிழக அரசியலில் ஜாம்பவானாக திகழும் கருணாநிதி, இந்த நாட்டை நிர்வகிப்பதில் மத்திய அரசுக்கு வழி காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இந்த பிரமாண்டமான கட்டிடத்துக்கு 2008 நவம்பர் 12ம் தேதி முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இந்த வளாகத்தை உலகத் தரத்தில் உருவாக்குவதை தமது அரசியல் வாழ்வின் முதன்மை சாதனையாக கருதுவதாக முதல்வர் கூறியிருந்தார்.