Dinakaran.com |17 May 2012

ஏர் இந்தியா விவகாரம் : விமானிகளின் மனு தள்ளுபடி
புதுடெல்லி: ஏர் இந்தியா விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில், நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த விமானிகளின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் பொய்யான காரணங்களை கூறி விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் விமானிகள் கடும் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ...

குடியரசுத் தலைவர் பதவி : பி.ஏ.சங்மாவிற்கு ஜெ. ஆதரவு
சென்னை: நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட முன்னாள் சபா நாயகர் பி.ஏ.சங்மாவிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு ...

ஷெட்யூல்டு பழங்குடியினர் பட்டியலில் படுகா இனத்தை சேர்க்க கோரிக்கை
டெல்லி: ஷெட்யூல்டு பழங்குடியினர் பட்டியலில் படுகா இனத்தை சேர்க்க  விழுப்புரம் எம்பி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்ட தொடரில் எஸ்சி, எஸ்சி சட்டதிருத்த மசோதா மீதான விவாதத்தில் அவர், தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்தில் படுகா இனத்தவர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்துகின்ற மொழி படுகு மொழி. இதற்கு எழுத்து வடிவம் கிடையாது. 1931ம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் படுகா இனத்தவரை எஸ்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், படுகா இனத்தை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது அவசியமாகும். தமிழக அரசின் கருத்துகள் ...

கோவை மாவட்ட பகுதிகளில் ரேசன் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிக்க ஏற்பாடு
கோவை: கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசால் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பண்டங்களான அரிசி, கெரசின், பாமாயில், பருப்பு வகைகள், கோதுமை ஆகியவற்றை பதுக்கி வைத்தல், கடத்தல் தொழில் செய்தல் அல்லது அதிக லாபத்துக்கு விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தங்களது பகுதிகளில் இருந்தால் அவர்கள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.கோவை குடிமைப்பொருள் காவல் ஆய்வாளரை 94421 88558 என்ற எண்ணிலும், அலுவலகத்தை 0422 2608889 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். புகார் பற்றிய ...

புதுக்கோட்டை இடைத்தேர்தல் ; திமுக நிலைக்கு முஸ்லீம்.லீக் ஆதரவு
தூத்துக்குடி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:அகில இந்திய அளவில் கட்சியின் இளைஞர் அணி பிரதிநிதிகள் மாநாடு ஜூலை 14, 15ம் தேதிகளில் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் நிர்வாகத்திறமை மிகவேகமாக இருக்கிறது. இதில் விவேகம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது, செம்மொழி பூங்காவை மூடுவது போன்றவை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை.திமுக ...

நித்திக்கு எதிராக வழக்கறிஞர்கள் மனு
மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட் வழக்கறிஞர்கள், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். மனுவில் இந்து மதத்தின் பாரம்பரியத்தை குலைக்கும் வகையில், நித்தியானந்தா செயல்பட்டு வருவதாக புகார் கூறியுள்ளனர். மேலும் மதுரை ஆதீன மடத்தை தமிழக அரசே கையகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் திங்கட்கிழமையன்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் வழக்கறிஞர்கள் ...

சென்னைக்கு எதிராக பஞ்சாப் முதலில் பந்து வீசுகிறது
தர்மசாலா:ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 66 வது ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இந்த இரு அணிகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக  அமைந்துள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு ...

கேரள மாநிலத்தில் மது குடிக்க புது சட்டம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 21 வயதுக்கும் மேற்பட்டவர்களே மது அருந்த உரிமை பெற்றவர்கள், என்னும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கேரளாவில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் 20 வயதிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் சிறார்கள் அதிகமாக மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. இதனையடுத்து கேரள முதல்வர் உம்மன்சாண்டி , புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இச்சட்டத்தின் படி 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே மதுபான கடைகளுக்குச் சென்று  மது வாங்க முடியும். மேலும் கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் ...

இலங்கையில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு மிரட்டல் கடிதம்
கொழும்பு: இலங்கையின் புனித தளமான தம்புள்ளை பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களை, உடனடியாக வெளியேற சொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் புத்த நாட்டுப் பற்றாளர்கள் என்று குறிப்பிடப்பட்டு அனுப்பபட்டுள்ள மிரட்டல் கடிதத்தில், தம்புள்ளை பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களை கடுமையாக சாடி உடனடியாக அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் ...

ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங் நலமுடன் வீடு திரும்பினார்
சண்டிகர்: ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங், நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின், முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து முதல்வர் புபிந்தர் சிங், மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு ...

மற்ற ஆதீனங்கள் என்னை மனிதனாக மதிக்கவில்லை நித்தி வேதனை
கும்பகோணம்: திருவாடுதுறை போன்ற பிற ஆதீனங்கள் என்னை மனிதனாக கூட மதித்து பார்க்காதது, தமக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக நித்தியானந்தா கூறியுள்ளார். கும்பகோணத்தில் நிருபர்களிடம் பேசிய நித்தியானந்தா, பிற ஆதீனங்கள் என்னிடம் தன்னிலை விளக்கம் கூட கேட்க தயாராக இல்லாதது தமக்கு வருத்தம் அளிப்பதாகவும் ...

குடியாத்தத்தில் துணிகரம் : கத்தி முனையில் ரூ.75 லட்சம் கொள்ளை
குடியாத்தம்: குடியாத்தம் ரயில் நிலையம் அருகே நகைக்கடை ஊழியரிடம் கத்தி முனையில் மிரட்டி, ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடியாத்தத்தில் உள்ள அசோக் ஜூவல்லரியில் பணிபுரிபவர் குப்புசாமி. இவர் வழக்கமாக சென்னை சென்று தினமும் நகைகளை வாங்கி வருவார். வழக்கம் போல் சென்னைக்கு புறப்பட ஆயத்தமாக இருந்த குப்புசாமியை, குடியாத்தம் ரயில் நிலையம் அருகே கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்த ரூ.75 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு ...

போதை பொருள் கடத்தல் வழக்கு : முப்பதாண்டு சிறை தண்டனை
திருச்சி: போதை பொருளான ஹெராயின் கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மூவருக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்பளித்துள்ளது.  6 வருடங்களுக்கு முன் ஹெராயின் போதை பொருள் கடத்திய வழக்கில் அலெக்ஸ், சுந்தர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டிருந்த மூவருக்கும் தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி ...

சென்னையில் ரூ.2 கோடி மோசடி
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் அடகு கடை நடத்தி வந்த தம்பதி ரூ.2 கோடி நகையை மோசடி செய்து தலைமறைவாகியுள்ளது. ஞானசம்பந்தம்-பழனியம்மாள் தம்பதியினர், தண்டையார்பேட்டையில் அடகு கடை ஒன்றை நடத்திவந்துள்ளனர். இக்கடையில் சுமார் ரூ.2 கோடி அளவிற்கு, மக்களால் நகைகள் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இத்தம்பதி திடீரென்று கடை மற்றும் வீட்டை பூட்டிவிட்டு மாயமாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், காவல்துறையில் புகார் ...

சென்னை தனியார் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து
சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில், பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  வேளச்சேரியில் உள்ள தனியார் பி.பீ.ஓ நிறுவனத்தில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பற்றி எரியும் தீயை அணைக்க, தீயணைப்பு படையினர் மூன்று தீயணைப்பு வண்டிகளில் ...

+2 மதிப்பெண் பட்டியல் மே 27ந் தேதியன்றே வழங்க நடவடிக்கை : அமைச்சர் சிவபதி
சென்னை: +2 தேர்வு முடிவுகள் வருகிற மே 22ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல் வருகிற மே 27ந் தேதியன்றே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்துள்ளார். ...

எல்லை தாண்டி மீன் பிடித்த ஐந்து இலங்கை மீனவர்கள் கைது
சென்னை: சென்னை அருகே இந்தியாவிற்குட்பட்ட கடல் எல்லையில், மீன் பிடித்த ஐந்து இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர், கடற்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து ,மீன் பிடித்துக் கொண்டிருந்த, இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை  கைது ...

மணல் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: ஜெ. எச்சரிக்கை
சென்னை: சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். மணல் கடத்தலில் ஈடுபடுவோர் ,யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று  ஜெயலலிதா கூறியுள்ளார். மணல் கடத்தலில் ஈடுபடுவோரை ,தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என்றும் உறுதி ...

நெல்லையில் தரமான சிகிச்சை கோரி பொதுமக்கள் போராட்டம்
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு, நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நல்ல தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை, என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய், இன்று நோயாளிகளை பார்வையிட நெல்லைக்கு வருகை தர உள்ள நிலையில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பது பரபரப்பை ...

நடப்பாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.5,800 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
புதுடெல்லி: நடப்பாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு, ரூ.5,800 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மக்களவையில் உறுப்பினர் தம்பிதுரையின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்ராம், கடந்த 2011-12ம் ஆண்டில் 2900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார். முன்னதாக மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தமிழகத்துக்-கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதிய வேறுபாடு நிலவுவதாக தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். ...