SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் வெடிகுண்டு வீசி கொலை

2018-02-14@ 00:35:16

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுகைப்(30). அந்த பகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணியளவில் சுகைப் தனது நண்பர்கள் நவுஷாத் (27), ரியாத்(27) ஆகியோருடன் அருகில் உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அவர்கள் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியது. இதில் படுகாயமடைந்த 3 பேரும் கீழே விழுந்தனர். பின்னர் அந்த கும்பல் இறங்கி வந்து அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றது. இதில் சுகைப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த நவுஷாத், ரியாத் இருவரையும் உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X